Posts

Showing posts from March, 2015

சித்த மருத்துவத்தில் தேனின் பயன்

Image
இன்றியமையாதது. இயற்கை தந்த வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன் பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும் விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்.... * கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும். தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக் கோளாறுகளும் குணமாகும். * வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா? உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத் தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும். * வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால், உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும். * இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில் இட்டு அட...

வேம்பு - மருத்துவக் குணங்கள்

Image
வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்டவுடன், அடையாளச் சின்னமாக மாறி மற்றவருக்கு நோய் தொற்றாமல் காக்கிறது. மேலும் அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, தோலில் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவற்றைக் குறைக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிறது. (விஷக் காய்ச்சல்) உள்பட பல்வேறு காய்ச்சலுக்கு வேம்பு அருமருந்து. வேப்பம்பட்டையை கஷாயமாகக் காய்ச்சிக் குடிக்க காய்ச்சல் மறையும். வேப்பம்பட்டை சூரணத்தையும் (பொடி) சித்த மருத்துவர்கள் தருவது வழக்கமாக உள்ளது. யானைக்கால் நோய்க்கான ஆரம்ப அறிகுறி தென்படும் நிலையில், கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. மருத்துவரின் பரிந்துரைப்படி, வேப்பம்பட்டை கஷாயத்தை தினமும் காலையில் 48 நாள்கள் குடித்து வந்தால், யானைக்கால் நோய் காரணமாக ஏற்படும் கால் வீக்கம் குறையும். கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு வேப்ப எண்ணெய் சிறந்த மருந்து. மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கு வேப்ப எண்ணெய் உள் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வைரஸை எதிர்க்கக்கூடிய ஆற்றல் வேம்புக்கு உண்டு. இதனால்தான் வீட்டில் ஒருவருக்கு அம்மை ஏற்பட்ட...