Posts

Showing posts from 2017

வேர்க்கடலை குழம்பு

Image
தேவையான பொருள்கள்: வேர்க்கடலை =அரை கப், தேங்காய் = 2 துண்டுகள், கடுகு = தலா ஒரு ‌டீஸ்பூன், உளுத்தம் பருப்பு = ஒரு ‌டீஸ்பூன், சீரகத்தூள் = ஒரு ‌டீஸ்பூன், புளிக்கரைசல், நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன் கறிவேப்பிலை சமையல் எண்ணெய் உப்பு = தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும். புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள  வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும். பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,  சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பொன்னிறமாக மாறியதும் ...

தொட்டாற்சிணுங்கி சூப்

Image
தேவையான பொருள்கள்: தொட்டாற்சிணுங்கி வேர் நீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள  வேண்டும். பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும். மேலும் விந்தணு பிரச்‌சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது. தொட்டாற்சிணுங்கி சூப்பின் மருத்துவக்குணங்களை உணர்ந்து  நம் அன்றாட உணவுடன் கஷாயமாக பயன்படுத்துவோம்.  “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”  என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.