Posts

Showing posts from August, 2015

வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!

Image
பானை போல பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!! உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எ டையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!! * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண் டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்ல...

ஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்

Image
அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக தானியங்களைத் தான் அதிகம் உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் எவ்வித நோயும் த ாக்காமல் ஆரோக்கியமாக இருந்தனர். எனவே நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், காலையில் தானியங்களை சேர்த்து வாருங்கள். அதிலும் தானியங்களில் ஒன்றான கம்புவை கூழ் செய்து குடித்து வருவது, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது, சத்தானது. இங்கு அந்த கம்பு கூழ் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: கம்பு மாவு - 1 கப் சாதம் ஊற வைத்த தண்ணீர் - தேவையான அளவு சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) மோர் - 1 கப் சாதம் - 1 கப் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி கிளறும் போது கலவைய...

சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்!!!

Image
* ஒரு வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெய ை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலை வலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம் போன்றவையும் குணமாகிவிடும். * தாய்ப்பாலில் சிறிது கிராம்பை அரைத்து போட்டு, பேஸ்ட் போல் செய்து அதனை தலைக்கு பற்று போட்டால், சைனஸால் ஏற்படும் தலைவலி நீங்கும். * தலைக்கு குளித்தப் பின், சாம்பிராணி புகையை போட்டு, தலையை காயவைத்துக் கொள்வது போல், ஓமம், சிறிது மஞ்சள் போட்டு, அதனால் வரும் புகையை நுகர்ந்து கொண்டால், ஜலதோஷம், நீர்க் கோர்வை போன்றவை சரியாகும். * குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற செடிகளின் இலையை சாறு பிழிந்து, அந்த சாற்றின் அளவிற்கு நல்லெண்ணெயை கலந்து, சூடேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெய் ஆறியதும், அதனை மூக்கினுள் விட்டால், நாள்பட்ட தலைவலி மற்றும் மூக்கினுள் ஏற்படும் குடைச்சல் போய்விடும். * கடுகு சிறிது, கஸ்தூரி மஞ்சள், சிறிது சாம்பிராணி ஆகியவற்றை பொடி செய்து, தண்ணீரில் கலந்து, படுக்கும்முன் நெற்றிக...

கத்தரிக்காய் சட்னி

Image
தேவையான பொருட்கள் :   கத்தரிக்காய் - 4   தக்காளி - 2   சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி   பச்சை மிளகாய் - 2   உப்பு - தேவைக்கேற்ப   மஞ்சள் தூள் - சிறிது   மிளகுத் தூள் - சிறிது   கடுகு - சிறிது   உளுத்தம்பருப்பு - சிறிது   கறிவேப்பிலை - தேவைக்கேற்ப    எண்ணெய் - சிறிது.  செய்முறை: • கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.  • வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கத்தரிக்காய் கலவையில் கொட்டி நன்றாக கலக்கவும்.  •  கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).  • கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், இரத்த சோகையைத் தடுக்கும்.

வாழைப்பழம் கோதுமை தோசை

Image
தேவையான பொருட்கள் : வாழைப்பழம் : 1 கோதுமை மாவு : 1/2 கப் அரிசி மாவு  : 1 ஸ்பூன் ரவை : 1/4 கப் வெல்லம் அல்லது கருப்பட்டி : 1/3 கப் ஏலக்காய் தூள்  : 1/4 ஸ்பூன் உப்பு : 1 சிட்டிகை எண்ணெய் / நெய் : தேவையான அளவு செய்முறை : • ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைப் பழத்தை துண்டுகளாக்கி கையாலோ அல்லது மத்தாலோ நன்கு மசித்து விடவும். • அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கி போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறியவுடன் வடிகட்டி வாழைப்பழத்துடன் சேர்க்கவும். மற்ற மாவையும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரத்திற்கு ஊற விடவும். • தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் எண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். • சுவையான வாழைப்பழம் கோதுமை தோசை ரெடி.

ராகி பூரி

Image
தேவையான பொருட்கள் ராகி மாவு - ஒரு கப் கோதுமை மாவு - ஒரு கப் ரவை - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க செய்முறை * தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். * எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும். * மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பூரி மாவாக பிசைந்து கொள்ளவும். * மாவை நீளமாக உருட்டி அதை சிறுத் துண்டுகளாக வெட்டி உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். * ஒவ்வொரு உருண்டையையும் பூரிகளாக திரட்டிக் கொள்ளவும். * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். * சுவையான ராகி பூரி தயார். * கோதுமை மாவை விட ராகி மாவு தண்ணீர் அதிகம் எடுப்பதால் பதமாக தண்ணீர் தெளித்து பிசையவும். இல்லையெனில் மாவு சீக்கிரம் வறண்டு திரட்டும் போது வெடிப்புகள் வரும். * சப்பாத்திக்கு மாவை தளர பிசைந்து சுடவும்.

தயிர் நெல்லிக்காய்

Image
தேவையான பொருட்கள் :   முழு நெல்லி - 10   கடைந்த தயிர் - 4 டேபிள் ஸ்பூன்   உப்பு - தேவையான அளவு  தாளிக்க :  எண்ணெய் - 1 டீஸ்பூன்   கடுகு - அரை டீஸ்பூன்   காய்ந்த மிளகாய் - 2   பச்சை மிளகாய் - 1 செய்முறை :  • தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.  • ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  • நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வேகவிட்ட நெல்லிக்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆற விடவும்.  • ஆறியதும் கடைந்த தயிரில் சேர்த்து பரிமாறவும்.  • இதை பிரிட்ஜில் வைத்து 2, 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.  • உடலுக்கு குளிர்ச்சி தரும் இந்த தயிர் நெல்லிக்காய்.

கொள்ளு தோசை

Image
தேவையான பொருட்கள்: கொள்ளு          –    1  குவளை நெல்அரிசி      –    1  மேசைக்கரண்டி உப்பு                   -        தேவையான அளவு வெந்தயம்      -     1  மேசைக்கரண்டி செய்முறை கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தயும் ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும். கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். மணமான கொள்ளு தோசை தயார். நீரழிவு உள்ள நண்பர்களுக்கு ஏற்ற உணவு.

பனிவரகு காளான் சோறு

Image
தேவையான பொருட்கள் பனிவரகு  -  1 குவளை காளான்  -  1/2 குவளை (நறுக்கியது) கடலை   எண்ணெய்  – 3 மே.கரண்டி ஏலக்காய்  -  2 எண்ணிக்கை பட்டை  – சிறிது கிராம்பு  -  2எண்ணிக்கை ஜாதிக்காய்,  ஜாதிபத்திரி  -  சிறிது பட்டை, சோம்பு  -  2 தே.கரண்டி (பொடித்தது) இஞ்சி, பூண்டு  விழுது  – 1 மே.கரண்டி மிளகாய்த்தூள்  -  1  தே.கரண்டி மஞ்சள்தூள்  -  சிறிது வெங்காயம்  -  1/4  குவளை தக்காளி  -  1/4 குவளை புதினா  -  1  கைப்பிடி தேங்காய்பால் -  1/4 குவளை செய்முறை எண்ணெயை  சூடாக்கி  பட்டை,  ஏலக்காய்,  கிராம்பு,  பட்டை  சோம்புப்  பொடி,  இஞ்சி  பூண்டு  விழுது  முறையே சேர்த்து  வதக்கவும்.  அதனுடன்  புதினா,  வெங்காயம்  சேர்த்து  நன்கு வதக்கவும்.  பின்  தக்காளி  மஞ்சள்தூள்,  மிளகாய்தூள்  சேர்த்து  வதக்கவும்....