Posts

Showing posts from June, 2015

"மரு" (Skin Tag) உதிர...

Image
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

புதினா ஒரு மருத்துவ மூலிகை

Image
புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப ் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர். புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக...

அன்னாசிப் பழ சாண்ட்விச்

Image
தேவையான பொருட்கள்: அன்னாசி – 2 கப் (நறுக்கியது) காட்டேஜ் சீஸ் – 1 கப் (துருவியது) ப்ரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் தேன் – 4 டேபிள் ஸ்பூன் கோதுமை பிரட் – 6 செய்முறை: • முதலில் மிக்ஸியில் அன்னாசி, ப்ரஷ் க்ரீம் மற்றும் தேன் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். • பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அரைத்து வைத்திருக்கும் அன்னாசி கலவையை சிறிது வைத்து, அதன் மேல் சிறிது காட்டேஜ் சீஸ் தூவ வேண்டும்.  • அடுத்து அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைத்து, பிறகு கத்தியைக் கொண்டு நறுக்கி விட வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும். * இப்போது சூப்பரான அன்னாசிப் பழ சாண்ட்விச் ரெடி!!!

தேங்காய்ப்பால் முறுக்கு

Image
தேவையானவை வறுத்த உளுத்தம் பருப்பு மாவு - 1 கப் அரிசி மாவு - 4 கப் தேங்காய் - 1 வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.முதலில்மிளகு, சீரகம் ஆகியவற்றை கரகரப்பாக மிக்ஸில்பொடித்துக் கொள்ளவும்.   2.பின்பு ஒரு பாத்திரத்தில் சலித்த அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுத்தம் பருப்பு மாவு, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெயைச் சேர்த்து மாவை நன்கு பிசையவும்.   3.அடுத்ததாக தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய்பால் எடுக்கவும். பிசைந்து வைத்த மாவை 4 அல்லது 5 பகுதியாக பிரித்துக் கொள்ளவும்.   4.ஒரு பகுதி மாவை மட்டும் தனியே எடுத்து சிறிது தேங்காய்ப் பால் சேர்த்து பதமாகப் பிசைந்து கொள்ளவும்.   5.முறுக்கு அச்சில்போட்டு மாவு ஒட்டாமல் வருவதற்காக எண்ணெய் தடவிக் கொள்ளவும். உங்களுக்கு பிடித்தவாறு 3 அல்லது 5 கண் அச்சை பயன்படுத்தவும்.   6.பாலிதீன் உறை அல்லது ஈரமான துணியின் மேல் சிறி...

இறால் இகுரு / ஆந்திரா இறால் குழம்பு

Image
தேவையான பொருட்கள் உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி – 1/4 கிலோ மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி தனியாத்தூள் – 3 தேக்கரண்டி சோம்பு – 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 3 தேங்காய் – 1 /2 மூடி புளி – 1 கோலி குண்டு அளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – 2 கொத்து செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும். இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம். இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். நன்கு கொதித்து வந்தவ...

பிரைடு சிக்கனை செய்வது எப்படி

Image
பலருக்கு பி ரை டு சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். தேவையான பொருட்கள் சிக்கன் – 1 கிலோ இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் – 1 டீஸ்பூன் மைதா – 1 1/2 கப் முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 1/2 டீஸ்பூன் தண்ணீர் – 1 கப் பிரட் தூள் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக...

அவல் பிரியாணி

Image
தேவையானவை: கெட்டி அவல் – ஒரு கப் கடலை மாவு – கால் கப் பச்சை மிளகாய் – 3, இஞ்சி – ஒரு சிறிய துண்டு எலுமிச்சைச் சாறு -1/2 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை – சிறிதளவு சோம்பு – ஒரு டீஸ்பூன் பட்டை – ஒரு சிறிய துண்டு வெங்காயம் – 1 பிரிஞ்சி இலை – ஒன்று, ஏலக்காய், லவங்கம் – தலா 2 எண்ணெய் – 4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை சுத்தம்செய்து, பொடியாகநறுக்கவும். பட் டை, லவங்கம், ஏலக்காயைத் தட்டிக்கொள்ளவும். சோம்பை தூளாக்கிக் கொள்ளவும். அவலை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கழுவி, நீரை வடிகட்டி, உப்பு, சோம்பு த்தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கிஸ இஞ்சி, பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய்சேர்த்து சிவக்கவறுக்கவும். அதனுடன் அவல் கலவையை சேர்த்துக்கிளறவும். வெந்ததும், கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கிளறி, கடைசியாக எலுமிச்சைச்சாறு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த அவல் பிரியாணியை, தக்காளி...

சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)

Image
தேவையானவை: சாமை அரிசி - 500 கிராம், நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம், வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி, சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு, தயிர் - அரைக் கோப்பை, புதினா - ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - 100 மி.லி., கிராம்பு - 5, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 2, பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு. செய்முறை: கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும். பலன்கள்: நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரி...

தினை அதிரசம்

Image
தேவையானவை: தினை அரிசி - ஒரு குவளை, பனை வெல்லம் - இனிப்புக்கு ஏற்ப, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, எள் - ஒரு தேக்கரண்டி, நெய் - ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: தினை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் உலர்த்தி பொடித்துக்கொள்ளவும். பனை வெல்லத்தை பாகு காய்ச்சவும். பிறகு தினை அரிசி மாவில் கொஞ்சம் எள், ஏலக்காய்த் தூளைப் போட்டு, அதில் இந்தப் பாகை ஊற்றி, மாவை மிருதுவாகப் பிசைந்துவைக்கவும். ஒரு நாள் விட்டு, மறுநாள் அதில் சிறிது நெய் விட்டு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, இலையில் வைத்துத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். 'தினை அதிரசம்’ தயார். பலன்கள்: வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு; பெரியோருக்கும்தான். பூசிய உடல்வாகைக் கொண்டவர்கள், 'இனிப்பான’வர்கள் மருத்துவரிடம் இருந்து விலகி இருப்பதற்கான வழியும்கூட. அரிசி - வெல்ல அதிரசத்தைக் காட்டிலும், தினை அதிரசத்தில் சுவையும் அதிகம்; நலமும் ஏகம்.

தினைப் பாயசம்

Image
தேவையானவை: தினை - 250 கிராம், பனை வெல்லம் - 200 கிராம், பால் - 250 மி.லி., முந்திரிப் பருப்பு - 15, ஏலக்காய் - 5, உலர்ந்த திராட்சை - 15, நெய் - 2 தேக்கரண்டி. செய்முறை: ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும். பலன்கள்: இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.

பனிவரகுப் புட்டு (கட்லட்)

Image
தேவையானவை:  பனிவரகு  மாவு - 200 கிராம்,  உருளைக்கிழங்கு - 200 கிராம், பட்டாணி, காரட், பீன்ஸ், வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி, சீரகம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். காரட், பீன்ஸை மிகப் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேகவைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பனிவரகு  மாவு  இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். நீர்க்க இருந்தால், இதனுடன் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாம். இதை நீள்வட்ட வடிவத்தில் உருண்டையாகப் பிடித்து கொள்ளவும். தீயை மிதமாகவைத்து, முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும். பலன்கள்: வரகில் புரதச் சத்தும், நார்ச் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு நல்ல வலு சேர்க்கும்.

வரகு போண்டா

Image
தேவையானவை: வரகு அரிசி மாவு - 300 கிராம், கடலை மாவு - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, சின்னவெங்காயம் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, சீரகத்தூள் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - ஒரு சிட்டிகை, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சாமைக் காரப் புட்டு

Image
தேவையானவை: சாமை அரிசி மாவு - 500 கிராம், எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - சிறிதளவு, உளுந்து - ஒரு தேக்கரண்டி, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு, தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு. பலன்கள்: நீராவியில் வேகவைத்த உணவு என்பதால், உடலுக்கு நல்லது. விரைந்து செரிக்கும் தன்மை கொண்டது. காரம் சேர்ப்பதால், மேலும் சுவை அதிகமாகும். செய்முறை: சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுக்கவும்.

தினை காரப் பணியாரம்

Image
தேவையானவை: தினை அரிசி - 500 கிராம், உளுந்து - 250 கிராம், வெந்தயம் - 3 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி, சின்ன வெங்காயம் - 250 கிராம், மிளகாய் - 4, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, சீரகம் - சிறிதளவு. செய்முறை: தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். கடலைத் துவையல், புதினாத் துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். பலன்கள்: தினை காரப் பணியாரத்தில் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து உணவாக இருக்கும். காரப் பணியாரம் செய்து கொடுத்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.

தினை அல்வா

Image
தேவையானவை: தினை அரிசி மாவு - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி, சுக்குத்தூள் - 2 சிட்டிகை, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம், நெய் - 100 கிராம். செய்முறை: தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும். பலன்கள்: புரதச் சத்து, மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்து அதிகம் நிறைந்த சிறுதானியம் இது. இதனுடன் இனிப்புப் பொருள் சேர்ப்பதால், அதில் உள்ள நுண் சத்துக்கள் அதிகமாகும். வைட்டமின்கள் நிறைந்த உணவு.

நோயைப் பொக்கும் சீத்தாப்பழம்

Image
சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து,  பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான்  இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து  தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு  கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடிஉதிராது. சீத்தாப்பழவிதைப் பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு,  இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப் பழவிதைப் பொடியை கலந்து தலையில்  தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும். சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்....

ராகி முருங்கை அடை செய்ய...

Image
என்னென்ன தே வை? ராகி மாவு - 2 கப்,  முருங்கை கீரை - அரை கப்,  பச்சரிசி மாவு - கால் கப்,  நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்,  உப்பு - தேவையான  அளவு.  தாளிக்க  கடுகு,  உளுத்தம்பருப்பு,  கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - 2.  எப்படி செய்வது? கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, வெங்காயம், முருங்கை இலை சேர்த்து  வதக்கவும். பத்து நிமிடம் வதங்கியதும், ராகி மாவு, அரிசி மாவில் கொட்டி இளஞ்சூடான தண்ணீரை ஊற்றிப் பிசைந்து, தோசைக்  கல்லில் கனமான அடைகளாக தட்டவும்.