Posts

Showing posts from February, 2015

வெள்ளரி

Image
வெள்ளரி...உள்ளே வெளியே உள்ளே... வெள்ளரியில் உள்ள ஃபிஸ்டின் (Fisetin) என்ற ரசாயனம், வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். வயதாவதால் மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்கும். நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து வெள்ளரியில் நிறைவாக உள்ளன. வெள்ளரிக்காய் தோலில் நீரில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக்கி, நச்சுப் பொருட்கள் எளிதாக வெளியேற உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. ஒரு கப் வெள்ளரியில் 16 கலோரிகள்உள்ளன. அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால், மிகச் சீக்கிரத்தில் செரிமானம் ஆகாது. ஆனால் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.  பொட்டாசியம் நிறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் உள்ள சிலிக்கா, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படச் செய்கிறது. கேரட் மற்றும் வெள்ளரிச் சாற்றைக் குடிப்பதன் மூலம் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்து மூட்டுவலியில் இருந்து விடுபடலாம்.  வெள்ளரியில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, மார்பகம், கர்ப்பப்பை, சினைப்பை...

பீட்ரூட் மருத்துவக்குணங்கள்

Image
பீட்ரூட்: பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். மருத்துவக்குணங்கள்: பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

Image
என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி. தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை. இதயத்தை பலப்படுத்தும் தாமரை. தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல். இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி). மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ் . நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை. மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம். வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.  உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை. மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம். குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.  ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல். கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம். மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம். நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி. வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை. நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.  ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி. மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.  மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய். மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது....

வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!

Image
திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான். அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு. மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும். எடை குறைவா இர...