இறால் இகுரு / ஆந்திரா இறால் குழம்பு
தேவையான
பொருட்கள்
- உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ
- இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- வெங்காயம் – 1/4 கிலோ
- தக்காளி – 1/4 கிலோ
- மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 3
- தேங்காய் – 1 /2 மூடி
- புளி – 1 கோலி குண்டு அளவு
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை – 2 கொத்து
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
- பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
- பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
- இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
- இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
- நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Comments
Post a Comment