நோயைப் பொக்கும் சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடிஉதிராது.
சீத்தாப்பழவிதைப் பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப் பழவிதைப் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டு வர புண்கள் ஆறும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

Comments
Post a Comment