பனிவரகு காளான் சோறு

தேவையான பொருட்கள்
பனிவரகு  -  1 குவளை
காளான்  -  1/2 குவளை (நறுக்கியது)
கடலை   எண்ணெய்  – 3 மே.கரண்டி
ஏலக்காய்  -  2 எண்ணிக்கை
பட்டை  – சிறிது
கிராம்பு  -  2எண்ணிக்கை
ஜாதிக்காய்,  ஜாதிபத்திரி  -  சிறிது
பட்டை, சோம்பு  -  2 தே.கரண்டி (பொடித்தது)
இஞ்சி, பூண்டு  விழுது  – 1 மே.கரண்டி
மிளகாய்த்தூள்  -  1  தே.கரண்டி
மஞ்சள்தூள்  -  சிறிது
வெங்காயம்  -  1/4  குவளை
தக்காளி  -  1/4 குவளை
புதினா  -  1  கைப்பிடி
தேங்காய்பால் -  1/4 குவளை
செய்முறை
  • எண்ணெயை  சூடாக்கி  பட்டை,  ஏலக்காய்,  கிராம்பு,  பட்டை  சோம்புப்  பொடி,  இஞ்சி  பூண்டு  விழுது  முறையே சேர்த்து  வதக்கவும்.  அதனுடன்  புதினா,  வெங்காயம்  சேர்த்து  நன்கு வதக்கவும்.  பின்  தக்காளி  மஞ்சள்தூள்,  மிளகாய்தூள்  சேர்த்து  வதக்கவும்.  இதனுடன்  கழுவிய  காளான்,  கழுவிக்  கல்லரித்த  பனிவரகு  அரிசி,  2 குவளை  நீர்,  உப்பு  சேர்த்துக் கொதிக்கவிடவும்.  தண்ணீரும்,  அரிசியும்  ஒரே  மட்டத்திற்கு  வரும்போது  தேங்காய் பால்  சேர்த்து  10 நிமிடம்  சிறு தீயில்  மூடிவைத்து  பரிமாறவும்.

Comments

Popular posts from this blog

புதினா ஒரு மருத்துவ மூலிகை

இள நரை மறையணுமா?

தொட்டாற்சிணுங்கி சூப்