கத்தரிக்காய் சட்னி
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
கடுகு - சிறிது
உளுத்தம்பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது.
செய்முறை:
• கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
• வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கத்தரிக்காய் கலவையில் கொட்டி நன்றாக கலக்கவும்.
• கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்).
• கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், இரத்த சோகையைத் தடுக்கும்.

Comments
Post a Comment